Saturday, August 21, 2004

"Poorvapara" - ஒரு கன்னடத் திரைப்படம்

கொங்கோர்டியா பல்கலைக்களகத்தில் அன்று ஒரு கன்னடத் திரைப்படம் ஒன்று பார்த்தேன் - "பூர்வபரா". படத்தைப் பற்றி விமர்சிக்க இங்கு முயலவில்லை; அந்த படவிழாவில் நடந்ததைப்பற்றித்தான் எழுத முனைகின்றேன். படம் காலில் இரும்ப்புக் குண்டு கட்டிக் கொண்டு நகரமுடியாமல் நகர்ந்தது, பார்வையாளர்களின் வெளிப்படையான முக்கல் முனகல்களிற்கு மத்தியில். இடையிடையே வாய்விட்டு வெளியிடப்பட்ட அதிருப்திகளும் இருந்தது. (சீதா மட்டும் நடிக்கவில்லை என்றால் படம் எப்போதோ செத்திருக்கும்!!).

இவ்வளவும் நடந்து முடிய, படம் முடிந்தபின் அங்கு வந்திருந்த இயக்குனரை பாராட்டினார்களே ஒரு பாராட்டு அதுதான் என்னை மிகவும் சங்கடப்படுத்தியது!! நிச்சயமாக ஒரு கலைமுயர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கவேண்டியது அவசியம்தான். அதற்காக, அவ்வளவு அவஷ்ட்டை பட்டு படத்தைப் பார்த்துவிட்டு, படம் ஏதோ சர்வதேச தரத்துக்கு இருந்தது என்று ஆளுக்கு ஆள் வாய்கூசாமல் பாராட்டினதுதான் சகிக்கமுடியவில்லை!! ஒரு கலைஞனின் முயற்சியை பாராட்ட வேண்டும் என்று நினத்து அந்தக்க் கலைஞனனின் வீழ்ச்சிக்கு காரணமாக தாங்கள் அமைவதை ஏன் மக்கள் உணரவில்லை? அதுவும் புத்திசீவிகள் சமுதாயத்தில் இருந்து கொண்டு...! அந்த இயக்குனரைப் பார்க்க எனக்கு பாவமாக இருந்தது! இதில் கொடுமை என்னவென்றால், அந்தப் பெரிய பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எல்லாம் பாராட்டி முடித்த பிறகு, என்னைப் போல எளியவர்கள் எமது விமர்சனங்களை வெளியிட்டாலும் அவை எடுபடப் போவதில்லை!! நூறு மடையர்கள் வாய்குளிர பாராட்டியபிறகு ஒரு நியாயமான அதிருப்தி எடுபடுவதே இல்லை; அதில் எனக்கு அநுவபம் உண்டு.

No comments: