Saturday, August 21, 2004

"Poorvapara" - ஒரு கன்னடத் திரைப்படம்

கொங்கோர்டியா பல்கலைக்களகத்தில் அன்று ஒரு கன்னடத் திரைப்படம் ஒன்று பார்த்தேன் - "பூர்வபரா". படத்தைப் பற்றி விமர்சிக்க இங்கு முயலவில்லை; அந்த படவிழாவில் நடந்ததைப்பற்றித்தான் எழுத முனைகின்றேன். படம் காலில் இரும்ப்புக் குண்டு கட்டிக் கொண்டு நகரமுடியாமல் நகர்ந்தது, பார்வையாளர்களின் வெளிப்படையான முக்கல் முனகல்களிற்கு மத்தியில். இடையிடையே வாய்விட்டு வெளியிடப்பட்ட அதிருப்திகளும் இருந்தது. (சீதா மட்டும் நடிக்கவில்லை என்றால் படம் எப்போதோ செத்திருக்கும்!!).

இவ்வளவும் நடந்து முடிய, படம் முடிந்தபின் அங்கு வந்திருந்த இயக்குனரை பாராட்டினார்களே ஒரு பாராட்டு அதுதான் என்னை மிகவும் சங்கடப்படுத்தியது!! நிச்சயமாக ஒரு கலைமுயர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கவேண்டியது அவசியம்தான். அதற்காக, அவ்வளவு அவஷ்ட்டை பட்டு படத்தைப் பார்த்துவிட்டு, படம் ஏதோ சர்வதேச தரத்துக்கு இருந்தது என்று ஆளுக்கு ஆள் வாய்கூசாமல் பாராட்டினதுதான் சகிக்கமுடியவில்லை!! ஒரு கலைஞனின் முயற்சியை பாராட்ட வேண்டும் என்று நினத்து அந்தக்க் கலைஞனனின் வீழ்ச்சிக்கு காரணமாக தாங்கள் அமைவதை ஏன் மக்கள் உணரவில்லை? அதுவும் புத்திசீவிகள் சமுதாயத்தில் இருந்து கொண்டு...! அந்த இயக்குனரைப் பார்க்க எனக்கு பாவமாக இருந்தது! இதில் கொடுமை என்னவென்றால், அந்தப் பெரிய பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எல்லாம் பாராட்டி முடித்த பிறகு, என்னைப் போல எளியவர்கள் எமது விமர்சனங்களை வெளியிட்டாலும் அவை எடுபடப் போவதில்லை!! நூறு மடையர்கள் வாய்குளிர பாராட்டியபிறகு ஒரு நியாயமான அதிருப்தி எடுபடுவதே இல்லை; அதில் எனக்கு அநுவபம் உண்டு.

Wednesday, August 11, 2004

பேச்சுத் தமிழா, எழுத்துத் தமிழா??

blogஐ எதில் எழுதுவது? பேச்சுத் தமிழில் எழுதினால் பதிவுகள் நெஞ்சோடு ஒட்டியதாக அமையும்; எழுதுத் தமிமிழில் எழுதினால் இலங்கைத் தமிழர் மட்டுமல்லாது மற்றவையரும் எனது பதிவுகளைப் படிக்க முடியும்! (உன்றையை ஆர் இங்க வந்து படிககப் போகினம் எண்டு கேக்கிறியளோ?!! ஒரு நப்பாசைதான்!) எனவே எழுத்துத் தமிழிலேயே எழுதுவது என்று தீர்மனித்துள்ளேன். இடையிடை சுவை மாற்றத்திற்காக பேச்சுத் தமிழும் வந்து போகலாம்.

Granby மிருகக்காட்சி சாலைக்கு ஒரு விஜயம்

Granby மிருகக்காட்சி சாலை மொன்றியலிலிருந்து ஒரு 1 மணி தொலைவில் உள்ளது. பெரிய்ய்ய இடம், நிறைய மிருகங்கள் எண்டு இங்க ஒரே எடுபிடி..! எனக்கெண்டா எங்கட தெகிவள மிருகக்காட்சிசாலையிலும் பார்க்க பெரீசா ஒண்டும் தெரியவில்லை..! எண்டாலும் இவன்களின்றை ஒளுங்கு முறையை மெச்சத்தான் வேணும். முக்கியமான் விசயம் என்னவெண்டால் இவன்கள் மிருகக்காட்சிசாலை எண்டுறதை சின்னப் பிள்ளைகளை குறிகோளாகக் கொண்டு அமைச்சிருக்கிறாங்கள். அது ஒரு மெச்சக் கூடிய விஷயம்; பெயர் பலகைகள் விளக்க முறைகள் எல்லாமே சின்னப் பிள்ளைகளுக்காகத்தான்.

மேலதிக புகைப்படங்களுக்கு இங்கே செல்லவும்.

எனது முதல் தமிழ் முயற்சி

எனது முதல் தமிழ் முயற்சி....

Monday, August 02, 2004

Me too got a Blog!!

This is my first blog primarily to explore the power of blogging and post my photo essays. Hoping to get many comments on my photos.